Saturday, April 12, 2014

மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு (சி-டெட்) முடிவு வெளியிடப்பட்டது.

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (சி-டெட்) பிப்ரவரி மாதம் 16-ம் தேதி நடந்தது. அகில இந்திய அளவில் நடத் தப்பட்ட இத்தேர்வை தமிழகம் உள்பட நாடு முழுவதும் 8 லட்சத்து 26 ஆயிரம் ஆசிரியர்கள் எழுதினர். தேர்வு எழுதிய அனைவ ரின் விடைத்தாள்களும் கடந்த 16-ம் தேதி ஆன்லைனில் வெளியிடப்பட்டன. இந்த நிலையில், தேர்வு முடிவு சனிக் கிழமை வெளியிடப்பட்டது.www.ctet.nic.inwww.cbse.nic.in ஆகிய இணையதள முகவரிகளில் தேர்வர்கள் தங்கள் பதிவு எண்ணை குறிப்பிட்டு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம் என்று மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) அறிவித்துள்ளது. தகுதித்தேர்வில் எத்தனை பேர் தேர்ச்சி பெற்றார்கள்? என்ற விவரம் எதுவும் வெளியிடப்பவில்லை. மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், சி.பி.எஸ்.இ. பள்ளி கள் உள்ளிட்ட பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment