Wednesday, April 23, 2014

அரசு மாதிரி வினாத்தாள் தாள்-1  விடைகள் 
அரசு மாதிரி வினாத்தாள் தாள்-2 விடைகள் 
அரசு மாதிரி வினாத்தாள் தாள்-1   
அரசு மாதிரி வினாத்தாள் தாள்-2 
கல்விச்சோலை மாதிரி வினாத்தாள்கள் 
அப்பல்லோ மாதிரி வினாத்தாள் தாள்-1
அப்பல்லோ மாதிரி வினாத்தாள் தாள்-2 
அக்டோபர்2012-தாள்1-விடைகள்
அக்டோபர்2012-தாள்2-விடைகள்
துணைத்தேர்வு2012-தாள்1-வினாத்தாள்

இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ள கீழே உள்ளவற்றை கிளிக் செய்யவும்.
கல்வி உளவியல்
கல்வி உளவியல் தாள்-1,2 வினாவிடை
தமிழ்
VAO பயிற்சி வினாத்தாள் - தமிழும் பொதுஅறிவும்
தமிழ் - ஆயிரம் வினாக்களும் விடைகளும்
TNPSC வினாத்தாள் - அறிவுக்கடல் பதிப்பகம்
TNPSC வினாத்தாள் - அறிவுக்கடல் பதிப்பகம்
பகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4 பகுதி-5 
தமிழ் முக்கிய குறிப்புகள் (8 பக்கங்கள்))
தமிழ் அறிவுக்கடல் வினாக்கள்
Pg-trb-tamil-test new 
ஆங்கிலம்
Way to Success Mini guide ror TET English (62 pages) New
கணக்கு
கணக்கு பாட பகுதிகள் (தாள்1) 
7th maths - English medium
6, 7th maths English medium 
7-ம் வகுப்பு கணிதம் வினாக்கள் 
அறிவியல்
அறிவியல் முக்கிய குறிப்புகள்(9 பக்கங்கள்)
7-ம் வகுப்பு அறிவியல் வினாக்கள் 
யார் கண்டுபிடித்தது? (அறிவியல் 1 முதல் 10-ம் வகுப்பு வரை)
8-ம் வகுப்பு உயிரியல் வினாக்கள் 
8-ம் வகுப்பு இயற்பியல் வேதியியல் வினாக்கள்.
6, 7-ம் வகுப்பு அறிவியல் குறிப்புகள
சமூகவியல் -Prepared by Mr.Srinivasan
4ம் வகுப்பு சமூகவியல் பாடப்பகுதி மற்றும் தேர்வ
5ம் வகுப்பு சமூகவியல் பாடப்பகுதி மற்றும் தேர்வு
6ம் வகுப்பு புவியியல் பாடப்பகுதி மற்றும் தேர்வு 
6ம் வகுப்பு வரலாறு பாடப்பகுதி மற்றும் தேர்வு
7ம் வகுப்பு வரலாறு பாடப்பகுதி மற்றும் தேர்வ
7ம் வகுப்பு புவியியல் தேர்வு
9ம் வகுப்பு வரலாறு தேர்வு -மற்றும் தேர்வு
9ம் வகுப்பு புவியியல் தேர்வு -மற்றும் தேர்வு
10ம் வகுப்பு வரலாறு-பகுதி1 -
10ம் வகுப்பு வரலாறு தேர்வு -
குடிமையியல் பாடப்பகுதி மற்றும் தேர்வு -
Way to Success - பொருளியல் பாடப்பகுதி மற்றும் தேர்வு -
PG-TRB
அறிவுக்கடல் வினாவங்கி

Saturday, April 12, 2014

ஏப்ரல் 28-ம் தேதி நடக்கவிருந்த மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு, மக்களவைத் தேர்தல் காரணமாக அடுத்த மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 28-ம் தேதி நடக்கவிருந்த மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு, மக்களவைத் தேர்தல் காரணமாக அடுத்த மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு அரசு சார்பில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மூலம் இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மார்ச் முதல் வாரத்தில் தொடங்கிய பயிற்சி வகுப்புகள் வரும் 15-ம் தேதி முடிகின்றன. இதற்கிடையே, ஏப்ரல் 28-ம் தேதி நடத்தவிருந்த சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு, மக்களவைத் தேர்தல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மே இறுதியில் தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,), இரண்டாம் தாளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, இம்மாத இறுதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,), இரண்டாம் தாளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, இம்மாத இறுதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெறுவதற்கான தகுதி மதிப்பெண் அளவை, இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, 60 சதவீதத்தில் இருந்து, 55 சதவீதமாக குறைத்து, முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி, முதல் தாளில் தேர்ச்சி பெற்ற, 20 ஆயிரம் பேருக்கு, கடந்த மாதம், சான்றிதழ் சரிபார்ப்பு பணியை, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) நடத்தியது. இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்ற, 27 ஆயிரம் பேருக்கு, வரும், 7ம் தேதியில் இருந்து, சான்றிதழ் சரிபார்ப்பை நடத்த, டி.ஆர்.பி., முடிவு செய்திருந்தது. முதல் தாள் சான்றிதழ் சரிபார்ப்பு, மாநிலம் முழுவதும், ஐந்து மண்டலங்களில் நடந்தது. ஆனால், இரண்டாம் தாள் சான்றிதழ் சரிபார்ப்பை, 32 மாவட்டங்களிலும் நடத்த, டி.ஆர்.பி., திட்டமிட்டது. இதற்காக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களை, பணிக்கு அனுமதிக்குமாறு, தேர்வுத் துறையிடம், டி.ஆர்.பி., கேட்டது. ஆனால், 'வரும், 20ம் தேதி வரை, தேர்வுப் பணிகள் இ ருப்பதால், முதன்மை கல்வி அலுவலர்களை அனுமதிக்க முடியாது' என, தேர்வுத் துறை தெரிவித்து விட்டது. இதனால், வேறு வழியின்றி, தேர்தலுக்குப்பின், இம்மாத கடைசியில், சான்றிதழ் சரிபார்ப்பை நடத்த, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது

மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு (சி-டெட்) முடிவு வெளியிடப்பட்டது.

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (சி-டெட்) பிப்ரவரி மாதம் 16-ம் தேதி நடந்தது. அகில இந்திய அளவில் நடத் தப்பட்ட இத்தேர்வை தமிழகம் உள்பட நாடு முழுவதும் 8 லட்சத்து 26 ஆயிரம் ஆசிரியர்கள் எழுதினர். தேர்வு எழுதிய அனைவ ரின் விடைத்தாள்களும் கடந்த 16-ம் தேதி ஆன்லைனில் வெளியிடப்பட்டன. இந்த நிலையில், தேர்வு முடிவு சனிக் கிழமை வெளியிடப்பட்டது.www.ctet.nic.inwww.cbse.nic.in ஆகிய இணையதள முகவரிகளில் தேர்வர்கள் தங்கள் பதிவு எண்ணை குறிப்பிட்டு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம் என்று மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) அறிவித்துள்ளது. தகுதித்தேர்வில் எத்தனை பேர் தேர்ச்சி பெற்றார்கள்? என்ற விவரம் எதுவும் வெளியிடப்பவில்லை. மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், சி.பி.எஸ்.இ. பள்ளி கள் உள்ளிட்ட பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2-வது தாளின் சான்றிதழ் சரிபார்ப்பு ஏப்ரல் முதல் வாரம் தொடங்கி ஒரு மாதம் நடக்கும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இடைநிலை ஆசிரியர்களுக்கான முதல் தாளில் தேர்ச்சி பெற்ற 18 ஆயிரம் பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி கடந்த 12-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 

சென்னை, மதுரை, திருச்சி, சேலம், கும்பகோணம் ஆகிய 5 மையங்களில் தினமும் 1,250 பேர் கலந்துகொள்கிறார்கள். 31-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடியும். 

விடுபட்டவர்களுக்கு ஏப்ரல் 1-ல் நடத்தப்படுகிறது. இந்நிலையில், தகுதித்தேர்வின் 2-வது தாளில் (பட்டதாரி ஆசிரியர்களுக்கானது) 28 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கி ஒரு மாதம் நடக்கும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்

தகுதித்தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ள 16 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் பாடப்பிரிவு, இடஒதுக்கீடு, தமிழ்வழி ஒதுக்கீடு வாரியாக வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் கூடுதலாக தேர்ச்சி பெற்றோருக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் இதுவரை 8 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் கூடுதலாக தேர்ச்சி பெற்ற 46 ஆயிரம் பேருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மார்ச் 12-ஆம் தேதி தொடங்கியது. சென்னை, மதுரை, திருச்சி, சேலம், கும்பகோணம் ஆகிய 5 இடங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்று வருகிறது. 

ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் கூடுதலாக தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இப்போது நடைபெற்று வருகிறது. ஒரு மையத்துக்கு 300 பேர் வீதம் 5 மையங்களில் நாளொன்றுக்கு 1,500 பேர் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க அழைக்கப்படுகின்றனர். இதுவரை சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டவர்களில் 1 சதவீதத்துக்கும் குறைவானவர்கள் மட்டுமே பங்கேற்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். 

 பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளைப் பாதிக்காத வகையில் மாநிலம் முழுவதும் 5 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீதம் (90 மதிப்பெண்) எடுத்து தேர்ச்சி பெற்ற 29 ஆயிரம் பேருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஏற்கெனவே நடைபெற்றுள்ளது. இந்தத் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தமிழக அரசு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்பட்டது. இதையடுத்து, ஆசிரியர் தகுதித் தேர்வில் 46 ஆயிரம் பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். 

தகுதித்தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ள 16 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் பாடப்பிரிவு, இடஒதுக்கீடு, தமிழ்வழி ஒதுக்கீடு வாரியாக வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தகுதித் தேர்வில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் என சுமார் 72 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தகுதித்தேர்வு மூலம் 2 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களும், 14 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் இடங்களும் நிரப்பப்பட உள்ளன. பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2-வது தாளில் மட்டும் 43 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. ஆனால், நிரப்பப்பட உள்ள காலியிடங்களோ 14 ஆயிரம் மட்டும்தான். 43 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தாலும் அவர்கள் எந்தெந்தப் பாடப்பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் என்பதும் இடஒதுக்கீடு நிலை குறித்த விவரமும் இன்னும் தெரியவில்லை. 

ஒட்டுமொத்தமாக பார்த்தால் 43 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், ஒரு சில பாடங்களில் அதிகம் பேர் இருந்தால் அங்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே வேலை கிடைக்கும். அதேநேரத்தில், ஒருசில பாடங்களில் காலியிடங்கள் அதிகமாக இருந்து, தேவையான எண்ணிக்கையில் ஆசிரியர்கள் வெற்றி பெற்றிருக்காவிட்டால் அங்கு காலியிடங்கள் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. பட்டியல் வெளியீடு இந்நிலையில், தகுதித்தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ள 16 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை அனை வரும் தெரிந்துகொள்ளும் வகையில் பாடப்பிரிவு, இடஒதுக்கீடு, தமிழ்வழி ஒதுக்கீடு, மாற்றுத் திறனாளிகளுக்கான ஒதுக்கீடு என பகுதி வாரியாக பட்டியலிட்டு வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. 

இந்தப் பட்டியல் வெளியான பிறகே, தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களில் எந்தெந்த கட் ஆப் மதிப்பெண் பெற்றவர்களுக்கு, எந்தெந்த பாட ஆசிரியர்களுக்கு, எந்தெந்த இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வேலை கிடைக்கும் என்பது உறுதியாக தெரியவரும். 

மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவு மார்ச் 21-ம் தேதி வெளியாகிறது. முதல் முறையாக, தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள்கள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளன.

மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவு மார்ச் 21-ம் தேதி வெளியாகிறது. முதல் முறையாக, தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள்கள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளன. 

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் கொண்ட பள்ளிகள் மற்றும் கேந்திரிய வித்யாலயா உள்ளிட்ட அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சி-டெட் என்று அழைக்கப்படும் இந்த தேர்வை மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்தி வருகிறது. 

அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் 16-ம் தேதி நடத்தப்பட்ட மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வை தமிழகம் உள்பட நாடு முழுவதும் 8 லட்சத்து 26 ஆயிரம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் எழுதினர். இந்த நிலையில், ஏற்கெனவே அறிவிக்கபட்டபடி தேர்வு முடிவு வருகிற 21-ம் தேதி (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவை www.ctet.nic.in என்ற இணையதளத்தில் தேர்வர்கள் அறிந்துகொள்ளலாம். 

 முதல்முறையாக ஆன்லைனில் விடைத்தாள் சி-டெட் தேர்வில் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்யவும், தேர்வின் மீது மாணவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும் தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள்களை (ஓ.எம்.ஆர். ஷீட்) முதல்முறையாக சி.பி.எஸ்.இ. ஆன்லைனில் வெளியிட்டு இருக்கிறது. தேர்வு ரோல் நம்பர் மற்றும் பிறந்த தேதியை மேற்கண்ட இணையதளத்தில் குறிப்பிட்டு, ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அதில் உள்ள விவரங்களில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் உடனடியாக இன்று (திங்கள்கிழமை) மாலை 5 மணிக்குள் ctet@cbse.gov.in என்ற இ-மெயில் முகவரிக்கு தகவல் தெரிவித்துவிட வேண்டும். அதேபோல், கீ ஆன்சரில் ஏதேனும் தவறு இருந்தால் அதுகுறித்து உரிய ஆவணங்களுடன் 19-ம் தேதி (புதன்கிழமை) மாலை 5 மணிக்குள் இ-மெயில் மூலம் தகவல் அனுப்பிட வேண்டும் என்று சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.