கோபி கல்வி மாவட்டத்தில், ஆசிரியர் தகுதித்தேர்வுக்காக, கடந்த, ஒன்பது நாட்களில், 10 ஆயிரம் விண்ணப்பங்கள் வரை விற்றுள்ளன.
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும், தகுதி தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2 முறையே, ஏப்., 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடக்கிறது. தேர்வுக்கான விண்ணப்பங்கள், கடந்த, 6 முதல் விற்பனை செய்யப்படுகின்றன.
ஈரோடு மாவட்டம், கோபியில், பவானி, அம்மாபேட்டை, அந்தியூர், டி.என்.,பாளையம், கோபி, சத்தியமங்கலம், நம்பியூர், தாளவாடி, பவானிசாகர் ஆகிய ஒன்பது யூனியன்களில், மொத்தம், 16 இடங்களில் விண்ணப்பம் வினியோகிக்கப்படுகிறது.
இக்கல்வி மாவட்டத்துக்காக, 16 ஆயிரத்து, 400 விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டன. கடந்த, 6 முதல், நேற்று முன்தினம் வரை, 10 ஆயிரத்து, 216 விண்ணப்பங்கள் விற்றுள்ளன. அதாவது, நாளொன்றுக்கு சரசாரியாக, 1,135 விண்ணப்பங்கள் விற்றுள்ளன.
கடைசி தேதிக்கு இன்னும் ஒரு வாரம் உள்ளதால், விண்ணப்பம் விற்பனை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment