Wednesday, March 1, 2017

ஆசிரியர் தகுதித் தேர்வு: கட்-ஆஃப் மதிப்பெண் முறையை நீக்க பரிசீலினை: பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதி.

 | ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு கட்-ஆஃப் மதிப்பெண் முறையை நீக்குவதுகுறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க இருப்பதாகபள்ளிக் கல்வித் துறை அமைச்சர்செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
 கோபியில் இருந்து சென்னை செல்லும் வழியில் கோவைவிமான நிலையத்தில் செய்தியாளர்களிடம்திங்கள்கிழமை அவர் மேலும் கூறியதாவதுமருத்துவப்படிப்பு மாணவர் சேர்க்கைக்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்என்று பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்இதுதொடர்பாகதமிழக சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிப்பார் என்றுநம்புகிறோம்ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு கட்-ஆஃப் மதிப்பெண் முறை நீடிப்பதால்பாதிப்புஇருப்பதாகத் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறதுஇதை நீக்குவது குறித்து பரிசீலித்து நடவடிக்கைஎடுக்கப்படும்.

No comments:

Post a Comment