ஆசிரியர் தகுதி தேர்வில் பங்கேற்க விண்ணப்பங்கள் 6ம் தேதி முதல் திருப்பூர் மாவட்டத்தில் வினி யோகிக்கப்படவுள்ளன.
இது குறித்து கலெக்டர் ஜெயந்தி வெளியிட்ட அறிக்கை
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர் தகுதி தேர்வு தாள்1 மற்றும் 2 ஆகியன ஏப்.29 மற்றும் 30 தேதிகளில் முறையே நடக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள் திருப்பூர் மாவட்டத்தில் பின்வரும் மையங்களில், வரும் 6ம் தேதி முதல் 22ம் தேதி வரை, வார நாட்களில், காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம் 50 ரூபாய் ரொக்கமாகச் செலுத்தி, பெற்று கொள்ளலாம். நபருக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே வழங்கப்படும். தாள் 1 மற்றும் 2க்கு தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் வழங்கும் மையங்கள்
திருப்பூரில், அரசு உயர்நிலைப் பள்ளிகள் கணக்கம்பாளையம்,நொய்யல் வீதி, கே.செட்டிபாளையம், ராக்கியாபாளையம் (அவிநாசி), வஞ்சிபாளையம், வ.வடுகபாளையம் (பல்லடம்), காரணம்பேட்டை, பொல்லிக்காளிபாளையம் மற்றும் குமரன் ரோடு புனித ஜோசப் பள்ளி.பொங்கலூர் ஒன்றியம் வடுகபாளையம்.
குடிமங்கலம் ஒன்றியம் குடிமங்கலம் மற்றும் கொங்கல் நகரம். மடத்துக்குளம் ஒன்றியம் சோழமாதேவி மற்றும் துங்காவி. குண்டடம் ஒன்றியம் மாதிரி மேல்நிலைப் பள்ளி குண்டடம் மற்றும் கெத்தல்ரேவ். உடுமலை ஒன்றியம் சிவசக்தி காலனி மற்றும் மலையாண்டிப்பட்டணம்.
தாராபுரம் ஒன்றியம் எல்லீஸ் நகர் சி.எஸ்.ஐ., ஆண்கள் பள்ளி; படியூர் மற்றும் நஞ்சியம்பாளையம். காங்கயம் ஒன்றியம் நெய்க்காரன்பாளையம். வெள்ளக்கோவில் ஒன்றியம் புதுப்பை, ஓலப்பாளையம் மற்றும் கே.பி.சி. நகர் புனித அமலா அன்னை மகளிர் பள்ளி.
மூலனூர் ஒன்றியம் மூலனூர் மாதிரி மேல்நிலைப்பள்ளி. ஊத்துக்குளி ஒன் றியம் செங்கப்பள்ளி, எஸ்.பெரியபாளையம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் இம்மாதம் 23ம் தேதி மாலை 5:00 மணிக்குள், திருப்பூர் ஈஸ்வரன் கோவில் அருகேயுள்ள பழனியம்மாள் நகராட்சி மேல்நிலைப் பள்ளி (புது கட்டடம்) சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
திருப்பூர் மாவட்டம் முழுமைக்கும் இந்த மையத்தில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும். வேறு மாவட்டங் களிலும் பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கலாம். இவ்வாறு, கலெக்டர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment