Wednesday, April 26, 2017

ஆசிரியர் தகுதி தேர்வு பணி புறக்கணிப்பு

வரும், 29, 30ல் நடக்க உள்ள ஆசிரியர் தகுதி தேர்வு பணியை புறக்கணிப்பதாக, மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் அலெக்சாண்டர், செயலாளர் கோபி, பொருளாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை: ஆசிரியர் தகுதி தேர்வு, வரும், 29 மற்றும், 30 ல் நடக்க உள்ளது. 

இந்த தேர்வில், முதுகலை ஆசிரியர் பணி நிலைக்கு ஒத்த பணி நிலையில் உள்ள உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை, கூடுதல் முதன்மை கண்காணிப்பாளராகவும், பட்டதாரி ஆசிரியர்களை, கூடுதல் துறை அலுவலர்களாகவும் பணி நியமனம் செய்துள்ளனர். 

பல ஆண்டுகளாக, முதுகலை ஆசிரியர்களாக பணியாற்றி வரும் மூத்த முதுகலை ஆசிரியர்கள், பணியில் இளையோரான உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கீழ், துறை அலுவலர்களாகவும், பட்டதாரி ஆசிரியர்களின் கீழ், அறை கண்காணிப்பாளர்களாகவும் செயல்படக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. 

எனவே, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைமை கழகம் எடுத்த முடிவின் படி, கிருஷ்ணகிரி மாவட்ட முதுகலை ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதி தேர்வு பணியை புறக்கணிப்பது என முடிவு செய்துள்ளோம்.

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வு பணி ஆயத்த கூட்டத்தையும் புறக்கணித்துள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்

No comments:

Post a Comment